கனடாவின் நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் வசித்துவருபவர்களுக்கு , மூன்றாவது கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதை, கனடிய தேசிய நோயெதிர்ப்பு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட பின்னரும் நோயெதிர்ப்பு திறன் காலப்போக்கில் குறைவடைகின்றமை குறித்த தரவுகளை ஆய்வு செய்த பின்னர் இப்புதிய பரிந்துரையினை அது வெளியிட்டுள்ளது. நீண்டகால பராமரிப்பு நிலைய வாசிகள் முதலாவது தடுப்பூசியை பெற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கு, Pfizer அல்லது Moderna ஆகியவற்றின் ஒரு தடுப்பூசி, மூன்றாவதாக வழங்கப்பட வேண்டுமென, கனடிய தேசிய நோயெதிர்ப்பு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post