இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு நாடுகளில் நடைபெற்ற
போட்டிகளில் கலந்துகொண்டிருந்த மல்யுத்த வீரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்
44 பேர், குறித்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், குழுக்களாக
தலைமறைவாகியுள்ளனர் என, இலங்கை மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் தற்போதைய
தலைவர், சரத் ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவபடுத்திய குறித்த மல்யுத்த வீரர்கள் அணியினர்,
நோர்வேயின் ஒஸ்லோ நகரில் இந்த மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி
வரை 72 உலக நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற உலக மல்யுத்த போட்டிகளில்
கலந்துகொண்ட போதே, இவ்வாறு தலைமறைவாகியுள்ளனர்.
எனினும் இவ்வாறு தலைமறைவாகியுள்ள பல வீரர்களும் அதிகாரிகளும் இப்போது
நாடு திரும்பியுள்ள நிலையில், இவ் அணியின் முகாமையாளர் குடாதந்திரிகே
டொனால்ட் இந்திரவன்ஸ, மீண்டும் இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை
எடுத்துள்ளதாக இலங்கை மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர்,
சரத் ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார்.
Discussion about this post