அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மேற்கொண்டிருந்த அமைதியான போராட்டத்தில் அரச ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை அடுத்து ஏற்பட்ட அசாதார நிலைமை நேற்றும் தொடர்ந்தது.
பல்வேறு இடங்களில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச மட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் நேற்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அலரி மாளிகையின் ஒருபகுதியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
மெதனமுல்லவில் உள்ள பஸில் ராஜபக்சவின் வீடு, முன்னாள் அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் வீடு, நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்கவின் வீடு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் விக்கிரமசிங்கபுரவில் உள்ள வீடு, அலுவலகம், முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் வீடு உட்படப் பல அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் நேற்றுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வீடு, பாடகர் இராஜ்ஜின் வீடு என்பனவும் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் ஹபிஸின் அலுவலகமும் தாக்குதலுக்கு இலக்கானது.
Discussion about this post