தென்கொரியாவின் இன்சியோனுக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதமாகியமையால் 60 தொழிலாளர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து வெளிநாட்டு
வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான
சேவையின் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்பிற்காக செல்லும் மற்றுமோர் குழுவினர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொழிலாளர்கள் குழு தற்காலிகமாக தங்குவதற்காக அருகிலுள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்தின் தாமதத்திற்கு அதிருப்தி வெளியிட்ட மனுஷ நாணயக்கார, இந்த 800வது குழுவை தென் கொரிய
வேலைகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
செய்துள்ளதாக குறிப்பிட்டார். அதேசமயம், தென்கொரிய மனித வளத் திணைக்களம் குறித்த குழுவை அனுப்ப
வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
Discussion about this post