இலங்கையில் எதிர்வரும் காலத்தில் நெல்லின் விலை அதிகரிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.அத்துடன் கோடிக்கணக்கில் இலாபமீட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டாமென விவசாயிகளிடம் வலியுறுத்தினார்.இதேவேளை அரிசி வியாபாரிகளிடம் இருந்து அரிசி இருப்புகளை கட்டுப்பாட்டு விலையில் அரசாங்கம் கொள்வனவு செய்வதால் தமது உற்பத்திப் பொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் ஒரு கிலோ நாடு நெல்லுக்கு 50 ரூபாவும் சம்பா நெல்லுக்கு 52 ரூபாவும் அதிகபட்ச விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post