பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவே பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தேன் என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆனால் இன்று எனது வீடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான காணொலி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது பெரும் சொத்தான 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான புத்தகங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பிரதமர், தனியார் ஊடகம் ஒன்றின் செயற்பாடாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கம் சட்டத்துக்கு ஏற்ப செயற்பட வேண்டும். நாம் அரசமைப்புக்கு அப்பால் செயற்படப் போவதில்லை. நாடாளுமன்றத்துக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post