நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு கடற்படையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், கடற்படையினரைக் கண்டவுடன் கஞ்சாவை வீசி விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post