இலங்கையின் மத்திய பகுதியான நுவரெலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துகள் பனிப்பொழிவானது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன.
படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இதனால் பூச்செடிகள்இ தேயிலை மரங்கள்இ அலங்கார மரங்கள் உள்ளிட்ட காய்கறித் தோட்டங்களின் மீது பனிப்பொழிவு விழுந்து இருந்ததால் சுற்றுச்சூழல் முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காண முடிந்தது.
அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடும் உஷ்ணமான காலநிலை
மேலும் பனிபொழிவால் தேயிலை மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப் பிரதேசத்தில் கடும் குளிர் எட்டு டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் பனிப்பொழிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post