நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், அதைச் சீர் செய்ய 5 நாள்கள் எடுக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதனால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவேட் மின்சாரம் இழக்கப்படும் நிலையில், எதிர்வரும் நாள்களில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து நாள்களில் தேசிய மின் இணைப்புடன் இந்த மின் உற்பத்தி நிலையம் மீண்டும் இணைக்கப்படும் என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன வீரசேகர தெரிவித்தார்.
இந்த மின் இழப்பை அனல் மற்றும் நீர் மின் உற்பத்திகளைப் பயன்படுத்தி நிர்வகிக் முயற்சி எடுக்கப்படும் என்றும், மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சக்தி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஆயினும், மின்வெட்டு நேரம் தொடர்பான எந்தவித அறிவித்தலையும் இலங்கை மின்சார சபை இதுவரை அறிவிக்கவில்லை.
Discussion about this post