நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்றைய தினம் (07-12-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன.
நுரைச்சோலை – தேத்தாப்பொல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹேந்திரா லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்த போது, அந்த அந்த லொறியில் 41 மூடைகளில் அடைக்கப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பீடி இலைகள் ஏற்றிய அந்த வாகனம் நுரைச்சோலை பகுதியிலிருந்து வேறு ஒரு பகுதிக்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1286 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்கள் பயணித்த லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post