வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தை நேற்றுக் காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post