கண்டி – தெல்தோட்டை – லிட்டில்வெளி பகுதியிலுள்ள ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலாக மீட்க்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை காணாமல் போன காந்தீபன் திவான் எனும் சிறுவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று மதியம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே நேற்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, நேற்றைய நாளின் தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனடிப்படையில், இன்று காலை மீண்டும் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மாணவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
சுதுவெல்ல கிராமசேவைக்குட்பட்ட இந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பான முறையில் கடந்து செல்ல பாதுகாப்பற்ற ஓடையின் குறுக்கே நான்கு மின்கம்பங்களைப் பயன்படுத்தி கிராம மக்களால் கட்டப்பட்ட சிறிய பாலம் உள்ளது.
இருபுறமும் பாதுகாப்பு பிடி இல்லாமல் சிறிய குச்சி போல் உள்ள இந்த பாலத்தின் மீது சிறு குழந்தைகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் என அனைவரும் அன்றாடம் கடந்து செல்கின்றனர்.
இதில் மற்றுமொரு உயிர் பறிபோகாமல் இருப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
Discussion about this post