உயர் நீதிமன்ற இருப்பின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான மனூஷ நாணாயக்கார மற்றும் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரின் பாராளுமன்ற உறுப்புரிமை இழக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குரிய அமைச்சுப் பொறுப்புகளும் வெற்றிடம் ஆகியுள்ளன.
ஏற்கனவே நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி தன் பொறுப்பில் ஏற்றுள்ளதைப் போல இவ்விரண்டு அமைச்சர் பொறுப்புகளும் ஜனாதிபதி தன் பொறுப்பில் சுவீகரித்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலமையினால் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்யும் வாய்ப்பு உதயமாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும் இவர்கள் இருவரும் யார் என்பதில் கட்சியில் பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு இதில் ஒரு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
எனினும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஹிருணிகாவுக்கு வழங்குவதில் அக்கட்சியினுள் விமர்சனங்கள் எழுந்துள்ளன ஹிருணிகா நீதிமன்ற குற்றச்சாட்டுக்கு உட்பட்டு இருப்பதுடன் அக்கட்சி எதிர்பாராத இன்னொரு சவால் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீண்டும் சிறைக்கு செல்ல நேர்ந்ததால் துமிந்த சில்வா சார்பான பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அரசாங்கத்துடன் ஏற்பட்ட முருகல் நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு சார்பானதாக இயங்கி வருகின்றது.
எனவே துமிந்தஜவிடயத்தில் தனது தந்தையின் கொலை தொடர்பான விவகாரத்தில் துமிந்த மீண்டும் சிறை செல்வதற்கு காரணமான ஹிருணிகாவுக்கு இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டாம் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post