மூத்த பிரஜைகளுக்கான விசேட உயர் வட்டி வீதத் திட்டத்தில் நிலையான வைப்புக்களை வைத்திருப்போர் நேரில் தோன்றியோ, எழுத்துமூலமோ திட்டத்தை நீடித்துக் கொள்வது கட்டாயம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அவ்வாறு நிலையான வைப்புகளை நீடிக்கத் தவறினால், அவர்களின் நிலையான வைப்பு மூத்த பிரஜைகளுக்கான விசேட உயர் வட்டி வீதத் திட்டத்தில் இருந்து, சாதாரண நிலையான வைப்புக் கணக்குகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் முதிர்ச்சியடையும் வகையில் இத்தகைய நிலையான வைப்புக்களை வைத்திருந்தால், எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது எழுத்துமூலமாகவோ கணக்கை நீடிக்கும் வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதுவரைகாலமும் நடைமுறையில் இருந்த நிலையான வைப்புக்கள் சுயமாகப் புதுப்பிக்கப்படும் நடைமுறை இனிமேல் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பிரஜைகளுக்கான விசேட உயர் வட்டி வீதத் திட்டத்தில் உள்ள நிலையான வைப்புகளுக்கு 15 வீத வட்டி வழங்கப்படுகின்றது. சாதாரண நிலையான வைப்புகளுக்கு 6 முதல் 7 வீத வட்டியே வழங்கப்படும்.
Discussion about this post