இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சுகாதாரக் கட்டமைப்பின் கொள்ளவுக்கு அப்பால், நபர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், வன்முறைகள் நிலைமையை மிகவும் மோசமாக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தற்போது முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அந்தச் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
Discussion about this post