அமெரிக்கா அண்மையில் நிலாவிற்கு ஆளில்லா விண்கலமொன்றை அனுப்பி வைத்தது. ஒடிசியஸ் என்ற விண்கலமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது.
சில நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் சஸ்கட்ஸ்வானைச் சேர்ந்த சன்டலே பாயிர் (Chantelle Baier) என்ற பெண்ணின் நிறுவனமும், நிலவிற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் பங்களிப்பினை வழங்கியுள்ளது.
சிறு வயது முதலே நட்சத்திரங்களையும் நிலவை பார்த்து ரசித்து வளர்ந்ததாகவும், நட்சத்திரங்களை தமக்கு மிகவும் பிடிக்கும் எனவும் சன்டலே தெரிவித்துள்ளார்.
சன்டேலே இந்த விண்கலத்தில் சுமார் 125 கலைப் படைப்புக்களை அனுப்பி வைத்துள்ளார்.
உலகின் புகழ்பூத்த நபர்களின் சிறிய சிற்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. லியனார்டோ டாவின்சி, எல்விஸ் பிரஸ்லி, மேர்லின் மன்றோ உள்ளிட்ட பலரின் சிறு சிற்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் நிலவிற்கு செல்வோர் இந்த சிற்பங்களை பார்வையிட முடியும் என சன்டலே தெரிவிக்கின்றார்.
Discussion about this post