அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் சாலைகளுக்கு அடியில் நிலத்தடியில் இருக்கும் குழாயில் அதிகாரிகள் முதலை ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
நிலத்தடி குழாய்களில் கசிவுகள், விரிசல்கள், குறைபாடுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது அதில் முதலை இருப்பது தெரியவந்தது.
“முதலில் அதிகாரிகள் அது தேரை என நினைத்து தப்புக்கணக்குப் போட்டனர். அதன் பின்னரே அது 5 அடி நீளமுள்ள முதலை என்பது தெரியவந்ததாக நகர நிர்வாகம் தெரிவித்தது.
அதோடு “நல்ல வேளையாக அதிகாரிகள் நேரடியாகச் செல்லாமல் இயந்திரத்தைப் பயன்படுத்திச் சோதனை செய்ததாகவும் நகர நிர்வாகம் கூறியுள்ளது.
Discussion about this post