நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குதற்கான யோசனையை வரவேற்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரமைப்பில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதியும் கலந்துரையாடி வருகின்றார் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச, முன்னர் பதவியில் இருந்த அரசாங்கங்கள் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவோம் என்று தெரிவித்திருந்தபோதும் அது நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச அண்மைக்காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்ற ரீதியிலான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
சமூக வலைத்தள முடக்கம், ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் என்பவை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களும் அவ்வாறே இருந்தன.
ராஜபக்ச குடும்பத்தினர் மீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலேயே அவர் இவ்வாறு செயற்படுகின்றார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post