நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முடிந்தால் இந்த வாரமே இல்லாதொழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வீதிகளில் இருந்து கேட்கும் குரலைத் தவிர, நாடாளுமன்றத்தில் எந்தக் குரலும் இருக்கக்கூடாது. மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதை பாராளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை இந்த வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். நாங்கள் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லை, மக்களின் ஆசியுடன்தான் அதிகாரத்தைப் பெறுவோம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 20ஆவது சட்டத் திருத்தத்தை இரத்துச் செய்து மீண்டும் 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
Discussion about this post