நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு, 2010 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கிய – முன்னாள் இராணுவத் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்ற ஆட்சி முறைமையை உருவாக்கும் விதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியில் தவிசாளர் பதவியை வகிக்கும் சரத் பொன்சேகா, பிரச்சினைக்கு, அரசமைப்பு மறுசீரமைப்பு தீர்வு அல்லவெனவும், அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார். ர்,
” ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கருத்து முன்வைக்கப்பட்டுவருகின்றது, உதாரணமாக பாடசாலையில் அதிபர் ஒருவர் ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டால் , அதிபர் பதவியையே இல்லாதொழிப்பதா அதற்கு தீர்வு? , அவ்வாறான அதிபரை நீக்கிவிட்டு, தகுதியானவரை பதவிக்கு நியமிக்க வேண்டும்.” – எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஜனாதிபதி ஆட்சி முறைமையே இருக்கின்றது. எனவே, நிறைவேற்று, சட்டவாக்கம், நீதி ஆகிய முத்துறைகளும் உரிய வகையில் செயற்படக்கூடிய விதத்தில் மாற்றியமைக்கலாம். தகுதியான நபர்கள், தகுதியான இடத்துக்கு வரவேண்டும்.
எனவே ,பதவிகளை நீக்குவதோ, அரசமைப்பு மறுசீரமைப்போ பிரச்சினைக்கு தீர்வு அல்ல, இலங்கையின் அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்பதே எனது கருத்து. ஊழல் அரசியல் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி எமது கட்சிக்கு கிடைக்குமானால், ஆட்சியை பொறுப்பேற்கத் தயார் எனவும் பொன்சேகா அறிவித்தார்.
Discussion about this post