நியூயார்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலால் மக்கள கூட்டம் அலைமோதியுள்ளது. இந்நிலையில் குவிந்த கூட்டத்தைக் கலைக்க நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் களமிடக்கப்பட்டனர்.
Twitch, YouTube ஆகிய தளங்களில் காணொளிகளும் நேரடி ஒளிபரப்புகளும் செய்யும் காய் செனட் (Kai Cenat) நியூயார்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அலைமோதிய மக்கள் கூட்டம்
அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படும் நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் கூரை, காரின் மேல் என எங்கும் மக்கள் கூட்டம் இலவச பரிசை பெற அலைமோதியது.
சிலர் போத்தல்களையும் நாற்காலிகளையும் தூக்கி வீசுவது ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில் தெரிகிறது. அத்துடன் நிகழ்ச்சிக்கு செனட் வந்திருந்த காரையும் மக்கள் விட்டுவைக்கவில்லையாம்.
சம்பவ இடத்திலிருந்து கார் கிளம்பியபோது காரிலிருந்து ஒருவர் விழுந்ததாக கூறப்படுவதுடன். இதில் எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Discussion about this post