மல்வானையில் உள்ள மாளிகை அமைப்பதில் நிதி மோசடி செய்யப்பட்டது என்று தொடரப்பட்ட வழங்கில் இருந்து முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மேல் நீதிமன்றில் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் பஸில் ராஜபக்ச குற்றமற்றவர் என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் தொடர்பு பட்டுள்ள பஸில் ராஜபக்சவின் மைத்துனர திருகுமாரன் நடேசனும் குற்றமற்றவர் என்று மேல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எழுந்த வன்முறையில் பஸில் ராஜபக்சவுக்குச் சொந்தமான மல்வானை மாளிகையும் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post