தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களுக்காக சுகாதார அமைச்சு சுமார் 1 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்று சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதையடுத்து சுகாதார அமைச்சுக்கான மருத்துவப் பொருள்களை வழங்குவதை நிறுத்துவதற்கு அந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன என்று சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக ஆய்வுகூட சோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே சில சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
அதேநேரம், சுகாதார அமைச்சு சில மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து வருகின்றது என்றும் அவரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Discussion about this post