இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நாளை முதல் உக்கிரமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாள்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அந்தச் தொழிற்சங்கத்தின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கப்பல்கள் வந்துள்ளபோதும், அவற்றுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை. அதனால் நாளை முதல் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் நின்றாலும் எரிபொருள் பெற முடியாது.
அத்துடன் மண்ணெண்ணை என்பதே இல்லாமல் போகும். மக்கள் கடுமையான மண்ணெண்ணை பற்றாக்குறையை எதிர்கொள்ளவுள்ளனர். பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுகிறார் என்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post