பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
அவர் நாளை நாடாளுமன்றத்தில் உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார் என்று தெரிய வருகிறது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பிரதம தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ஏற்கனவே ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
இதேவேளை பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படவுள்ளது.
Discussion about this post