ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நாளை மறுதினம் 04 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியது.
இதன்போதே இவ்விரு பிரேரணைகளையும் கையளிப்பதற்கு, நாடாளுமன்ற குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒருவர் போட்டியிடுவார்.
அத்துடன், இப்பிரேரணைகளில் கையொப்பமிட்ட உறுப்பினர்களையும், கையொப்பம் இடாத உறுப்பினர்களையும் மக்கள் முன் பகிரங்கப்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
Discussion about this post