விடுமுறைக்குப் பின்னர் அரச பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் தடிமன், இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட நிபுணர் தீபால் பெரேரோன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்களால், ஏனையோருக்கும் நோய் பரவும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post