கனடாவில் செல்லப் பிராணிகளை குறிப்பாக நாய்களை வளர்ப்போருக்கு, நாய்களை கட்டி வளர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், காலை நேர உடற்பயிற்சியின் போது, நாயடகள பொதுவாக அனைவரும் அழைத்து வருவது வழமை.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், சிறுவர்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை நாய்கள் கடிப்பதாக அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாய்கடி சம்பவங்கள் அண்மைக் காலமாக டொரன்டோவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயின் விளைவாகவும் இரு்கலாம் எனவும் அந்நாட்டு அரசு அஞ்சுகின்றது.
காரணம் தீயை கண்டால் நாய்களுக்குள் எழும் இனம்புரியாத பயம் மற்றும் பதற்றநிலை காரணமாக நாய்கள் இவ்வாறு அருகில் இருப்பவர்களை கடிப்பதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, நாய்களை வளர்க்கும் நபர்கள் அவற்றை கட்டி வளர்க்க வேண்டும் எனவும் நாய்களை கட்டுப்படுத்தி வளர்ப்பது அதன் உரிமையாளர்களின் பொறுப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் டொரன்டோவில் 1316 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் சிறுவர்கள் மாத்திரம் 300ற்கும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இது கடந்த 2021 ஆம் ஆண்டை விடவும் 39 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்களை கட்டி வளர்க்காத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு 365 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post