ஆட்சி கவிழ்ப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்த அழைப்பை, விமல் வீரவன்ச தரப்பு உட்பட அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட சுயாதீன அணிகள் நிராகரித்துள்ளன.
சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது .
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், மஹிந்த ராஜபக்சவின் நீண்டகால அரசியல் நண்பரான வாசு தேவநாணயக்கார ஊடாகவே, நாமல் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விமல் வீரவன்ச, கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வாசுதேவ நாணயக்கார தெரியப்படுத்தியுள்ளார்.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்ச தரப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்பதால், அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசை மாற்றிவிட்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைக்கவே நாமல் அழைப்பு விடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
Discussion about this post