பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
எனவே அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு வலியுறுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியான ரேணுக பெரேரா தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள நாமல்
ஜனாதிபதி வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்குவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் இருப்பதாகவும் புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள நிலையில் அவருக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ பாதுகாப்பு தரப்புக்கும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியுள்ளார். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது பெரும்பான்மை மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்றும் ரேணுக பெரேரா தெரிவித்தார்.
Discussion about this post