தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலமாக நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.
பின்னர் வாணி ராணி, கல்யாணப்பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்தார்.
இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்துள்ளார்.
ஜிம், உணவு என ஃபிட்னஸில் ஆர்வம் கொண்ட அரவிந்த் சேகர் ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருப்பவர் ஆவார்.
தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணமடைந்தது நடிகர், நடிகைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை ஜோடிகளில் பலரது மனம் கவர்ந்த ஜோடியாக இருவரும் வலம் வந்த நிலையில் அரவிந்தின் மரணம் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post