சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான பல கடிதங்கள், ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பிரதமரின் செயலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக கடமையாற்றிய போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் பல சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்தி இருந்ததுடன் அவை தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பிரதமரின் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
போராட்டகாரர்கள் பிரதமரின் செயலகத்தை கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளன என்று செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவையான நிதியுதவிகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமான முக்கியமான தகவல்கள் அந்த ஆவணங்களில் காணப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post