ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுகின்றன என்று இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து தப்பியோட முயல்கின்றனர் என்ற தகவல்கள் கொழும்பில் காட்டுதீ போல பரவுகின்றன என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்காவிலும் இரத்மலானையிலும் ராஜபக்சாக்களை ஏற்றிக்கொண்டுபயணிப்பதற்காக இரண்டு விமானங்கள் தயார் நிலையில் உள்ளன என்ற தகவல்களும் கொழும்பில் காணப்படுகின்றன.
முதல் குடும்பம் மீதான பொதுமக்களின் சீற்றம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது. எனினும் ராஜபக்ச சகோதரர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை நிராகரித்துள்ளன. சகோதரர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வை காணமுயல்கின்றனர் என அவை தெரிவித்துள்ளன.
Discussion about this post