இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் எரிபொருள் கையிருப்பு அடிமட்டத்தை அடைந்துள்ளதால் நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரியவருகின்றது.
இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும் 10 வீத எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்படுகின்றது என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கைக் கடற்பரப்பில் பெற்றோல் தாங்கிக் கப்பல் ஒன்று பல நாள்களாக நங்கூரமிட்டுள்போதும், அதற்கான கட்டணத்தைச் செலுத்த இலங்கை அரசாங்கத்திடம் டொலர் கையிருப்பு இல்லை.
அதேவேளை, நாட்டில் டீசலுக்கும் கடுமையான தட்டுப்பாடு காணப்படுகின்றது. தற்போது டீசல் தாங்கிக் கப்பல் ஒன்றில் இருநது டீசல் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தட்டுப்பாடு சற்றுத் தணியும் என்று கூறப்படுகின்றது.
நேற்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post