இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் எவ்வித பதிவையும் மேற்கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி,வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி 14 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஜப்பானுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி அவரிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த இளைஞன் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்து அவருக்கு எதிராக வெளிநாடு செல்லவதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார்.
Discussion about this post