தற்போது நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசையை காண முடிகின்றது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை பெட்ரோலிய பௌசர் உரிமையாளர்கள் சங்கம் அடுத்து வரும் இரண்டு நாள்களில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
எரிபொருளை முற்பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.
எரிபொருள் வரிசை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவீற்றர் கணக்கில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளுக்கு முற்பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post