நாட்டில் பெற்றோல் மற்றும் டீசலுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது. யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
அதேவேளை, மார்ச் மாதம் இலங்கையை அடைந்த எரிபொருள் கப்பலுக்குத் தற்போது கட்டணம் செலுத்தப்பட்டு எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோலைத் தாங்கும் திறன் கொண்டது.
எரிபொருள் கட்டணத்துக்கு மேலதிகமாக தாமதக் கட்டணமாக 335 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post