நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, செட்டியார் தெருவின் நேற்றைய நிலைவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 2 லட்சம் ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
Discussion about this post