சிறிலங்காவில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருந்து வெளியேறும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் ருவன் ஜயசிறி தெரிவித்துள்ளதாவது-
இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக் கூடும். தற்போது நாட்டிலிருந்து மருத்துவர்கள் வெளியேறுகின்றனர் என்று கூறப்படுகிறது. மருத்துவ சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2 ஆயிரத்து 200 அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
விசேட வைத்தியராக ஒருவர் பதிவு செய்வதற்கு முன்னர் வெளிநாட்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவர்களில் அதிகமானோர் கற்றல் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.- என்றார்.
Discussion about this post