கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 5 ஆயிரத்து 252 ட்ரில்லியன் ரூபா என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்த வேண்டிய கடன் தொகையானது 14 ஆயிரத்து 155 ட்ரில்லியன் ரூபாவாக இருந்ததுடன் அது 2021 ஆம் ஆண்டில் 19 ஆயிரத்து 407 ட்ரில்லியன் ரூபாவாக அதிகரித்தது.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் அரசின் மொத்த கடன் தொகையானது மொத்த தேசிய வருமானத்தில் 94.4 சத வீதமாக இருந்தது. அந்த தொகையானது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 115.5 வீதமாக அதிகரித்துள்ளது.
Discussion about this post