கையிருப்பில் உள்ள எரிவாயு இன்று வரை மட்டுமே போதுமானது என்று பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தலா 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இரு கப்பல்கள் இலங்கைக் கடலில் நங்கூரமிட்டுள்ள நிலையில், இன்று அந்தக்கப்பல்களில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன் கடிதங்கள் வெளியிடப்பாடாவிட்டால் மீளவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை , ஒரு வாரமாக எந்தவொரு சமையல் எரிவாயு சிலிண்டரையும் பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனமான ‘லிட்ரோ’ நிறுவனம் விநியோகிக்கவில்லை. இதனால் பல பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மிகக் கடுமையாக நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post