கொவிட் தொற்று பரவலுக்கு இடமளிக்கப்பட்டால் மாத்திரமே அதன் மூலமான
அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.
எனவே ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் நாடு திறக்கப்பட்டாலும் அடிப்படை சுகாதார
விதிமுறைகளைப் பின்பற்றினால் கொவிட் அபாயத்திலிருந்து முழுமையாக விடுபட
முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய
நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்
,தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் பின்பற்ற
வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் ஏற்கனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகத்தினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அதனையே தொடர்ந்தும்
பேண வேண்டும். எதிர்வரும் ஓரிரு தினங்களில் இது தொடர்பில்
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
Discussion about this post