Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாடு திரும்பிய 23 வயது இளைஞன் வீட்டில் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

September 1, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
நாடு திரும்பிய 23 வயது இளைஞன் வீட்டில் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புத்தளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் இன்று (31-08-2024) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவத்தில் நகூர் பள்ளி வீதியில் வசித்து வந்த 23 வயதான முஹம்மது ஹசன் முஹம்மது அம்ஜத் எனும் திருமணமாகாத இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தொழில் நிமித்தம் கடன்பெற்று வெளிநாட்டுக்கு சென்ற இளைஞன், அங்கு தொழில் கிடைக்காத நிலையில் அவர் பாரிய கடன் சுமையோடு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் இன்று (31) காலை தனது பெற்றோர்களுடனும், 2 சகோதரிகளுடனும் ஒன்றாக இருந்து உரையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர், வீட்டின் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தாவாணி ஒன்றில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இளைஞனை மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.பின்னர் இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாமுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.உயிரிழந்த இளைஞனின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையைக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

Next Post

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Next Post
அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.