சிறிலங்கா நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.இரு ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்ற உணவு வழங்கல் பிரிவில் பணியாற்றும் குறித்த ஊழியர்களுக்கிடையில் கேக் துண்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிரடிப் படைஇதேவேளை வாக்குவாதம் முற்றியதையடுத்து, இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதன்போது உணவு ஆய்வு தொடர்பான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட உணவு மற்றும் பானங்கள் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மோதலை சமரசம் செய்தனர்.குறித்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post