இன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்று, விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.
அந்த உரையின் போது, தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும்,
தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ரணில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றில் காரசாரமான விவாதம் ஏற்பட்டிருந்ததுடன் அமளிதுமளியும் ஏற்பட்டது.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டவர்களுக்கு “வாயை மூடிக்கொண்டு அமருங்கள்” என கோபமாகவும் பேசியுள்ளார்.
மேலும், தேர்தலை பிற்போடுங்கள், நாங்கள் கூச்சலிட்டு விட்டு பின்னர் அமைதியாகி விடுகிறோம் என என்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது நான் தேர்தலை பிற்போடுவதாக என்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் ரணில் உரையாற்றியதை தொடர்ந்து அமைதியற்ற நிலை தொடர்ந்திருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கடசி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post