நாட்டின் நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்தபோது எதிர்க்கட்சியினர் கூச்சல் இட்டுத் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றில் முன்வரிசையில் அமர்ந்து சபை அமர்வுகளை அவதானித்தார். சிறிது நேரத்திலேயே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினரும் மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அதேநேரம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என்று நேற்று ஆளும் கட்சிப் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
Discussion about this post