நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக நடத்தும் சாத்தியம் இல்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
’நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே தற்போது காணப்படுகின்றது. அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும், முன்னர் தீர்மானித்ததைப் போன்று எதிர்வரும் 17ஆம் திகதியே நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் ’ என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று நடைபெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று நேற்றுக்காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post