Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தால் என்ன நடக்கும்?

July 13, 2022
in இலங்கை
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தால் என்ன நடக்கும்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிரணி பிரதம கொறடாவுமான லக்‌ஷ்மன் கிரியல்ல இந்த தகவலை ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.

” பதில் ஜனாதிபதியாக செயற்படும் பிரதமர் பதவி விலகினால் இப்பிரச்சினை தீர்ந்துவிடும். எனவே, தாக்குதல் நடத்த அனுமதி வழங்க முடியாது என தெளிவாக குறிப்பிட்டோம்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அவசர கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று மாலை அழைப்பு விடுத்திருந்தார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால், பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் செயற்படுவார். அவர் ஊடாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம். எனவே ,பிரதமர் பதவி விலக வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், இக்கூட்டத்தில் பதில் ஜனாதிபதியாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை. மொட்டு கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கருத்து வெளியிட்ட லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி.,

” கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னர் முப்படை தளபதிகள் பதில் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இதன்போது மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து பதவி விலகுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், பிரதமர் ரணில் பதவி விலகினால் பிரச்சினை முடிவுக்கு வரும். சபாநாயகருடன் கலந்துரையாடி அப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என நாம் படை தரப்பிடம் குறிப்பிட்டோம்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

Tags: இலங்கைஐக்கியமக்கள் சக்திகைப்பற்றல்நாடாளுமன்றம்நிராகரித்தல்முயற்ச்சி
Previous Post

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு – நாடளாவிய ரீதியில் அவசர கால சட்டம்

Next Post

இன்றைய ராசிபலன்- 14.07.2022

Next Post
இன்றைய ராசிபலன்- 18.06.2022

இன்றைய ராசிபலன்- 14.07.2022

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.