நாடாளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சபாநாயக்கர் மஹிந்த யாப்ப அபேவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயக்கர் கோரியுள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைகளை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மக்களால் தொடர்ச்சியாக தீயிடப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிர மடைந்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை அடுத்து நாடாளுமன்றத்தை உடன் கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என்று சபாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post