ரஷ்யா மிக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்திய “ஹைப்பர்சோனிக்” ஏவுகணைகளை உக்ரைன் போரில் பயன்படுத்தியதை முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து 600 கிலோமீற்றர்கள் மேற்கே உள்ள உக்ரைன் படைகளது ஆயுதக் கிடங்கு ஒன்றை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளன என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு சனியன்று தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறை ஏவுகணை என்று அதிபர் புடினால் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தரப்பட்டிருந்த “கின்ஷால்” எனப் பெயரிடப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
மிக் போர் விமானங்கள் மூலம் பயன்படுத்தக் கூடிய இந்த வான் வழித் தரை இலக்கைத் தாக்குகின்ற நீண்ட தூர ஏவுகணைகள் ரஷ்யா கடந்த பத்து ஆண்டுகளுக்குள் தயாரித்த சவால்
மிக்க போராயுதம் ஆகும்.
மணிக்கு 6 ஆயிரம் கிலோமீற்றர்களுக்கும் அதிக வேகத்தில் – ஒலிவேகத்தை விடப் பல மடங்கு அதிக விரைவில் – பறக்கவல்ல இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளிடம் தற்சமயம் உள்ள வான் பாதுகாப்புக் கவசங்கள் எவற்றாலும் தடுத்து விட முடியாது என்று ரஷ்யா கூறுகிறது.
அதேவேளை, அமெரிக்க வல்லரசு தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2024 ஆம் ஆண்டு பாவனையில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. சீனா ஏற்கனவே தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையைக் காட்சிப்படுத்தியுள்ளது.
Discussion about this post